ஆப்பக்கூடல் ஒரிச்சேரிப்புதூரில் புகையிலை விற்ற மளிகை கடைக்காரர் கைது
ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரிப்புதூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.;
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகேயுள்ள ஒரிச்சேரிப்புதூர் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கோவிந்தராஜ் வயது (60) என்பவரின் மளிகை கடையில் போலீசார் சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை 6 பாக்கெட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. 6 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளர் கோவிந்தராஜை கைது செய்தனர். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.