கோபிசெட்டிபாளையம் அருகே விஷம் குடித்து மூதாட்டி உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே விஷம் குடித்து மூதாட்டி உயிரிழப்பு; முதியவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-05-24 13:30 GMT

பச்சையம்மாள்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நாயக்கன்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியதம்பி (வயது 77). இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 72). இருவரும் கோபிசெட்டிபாளையம் மார்க்கெட்டில் கீரை வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக அவர்கள் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வந்தனர். ஆனால் நோய் குணமாகவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இனி வாழ்வதை விட சாவதே மேல் என முடிவெடுத்து இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பச்சையம்மாள் பரிதாபமாக இறந்தார். பெரிய தம்பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோபி செட்டி பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News