கோபிச்செட்டிப்பாளையம் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
கோபிச்செட்டிப்பாளையம் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பச்சயப்பன் விவசாயி. இவரது மனைவி லட்சுமி (வயது 67). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார்.
இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், லட்சுமி திடீரென விஷம் குடித்தார். பின்னர், மயங்கிய நிலையில் இருந்த லட்சுமியை, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.