டி.என்.பாளையம் தனியார் வேளாண் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
டி.என்.பாளையம் தனியார் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மாணவிகளுக்கு இளங்கலை பட்டங்கள் வழங்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையத்தில் செயல்பட்டு வரும் ஜே.கே.கே.முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் டாக்டர்.என். அசோக்ராஜா வரவேற்புரை வழங்கினார்.இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்.பி. சந்திர சேகரா - பொது இயக்குநர் மேனோன், டாக்டர் பி.ஜி. செங்கப்பா- முன்னாள் துணை வேந்தர் ( வேளாண் பல்கலைக்கழகம், பெங்களூரு) , டாக்டர். எஸ். பிரபு குமார் - முன்னாள் இயக்குநர் (அபாரி), டாக்டர். வி. புகழேந்தி முன்னாள் பேராசிரியர் ( கொன்கூக் பல்கலைக்கழகம்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தொடர்ந்து கடந்த 2014 மற்றம் 2015 ஆண்டு வேளாண்மை கல்லூரியில் இளங்கலை பட்டபடிப்பு பயின்று முடித்த சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவி மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். மேலும் இவ்விழாவில் தலைவர் எம். வசந்த குமாரி முனிராஜா , அறங்காவலர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆராய்ச்சியாளர் பாக்டர். எஸ். கிருபாகரண் முரளி, கல்லூரியின் செயலாளர் எம். கஸ்தூரிபிரியா கிருபாகரன் முரளி ஆகியோர் தலைமை தாங்கினார்.
பட்டங்களை பெற வந்த மாணவ மாணவிகள் பட்டமளிப்பு சீருடை அணிந்து வந்து வரிசையில் நின்றும், இந்த ஆண்டே கல்லூயில் முதன் முதலாக பட்டமளிப்பு விழா நடைபெறுவதால், ஆர்வத்துடன் கலந்து கொண்டு பட்டங்களை பெற்றுக்கொண்டனர். தனி பாட பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் , வேளாண்மை குறித்து கள பணி மற்றும் செய்முறை பயிற்சிகளை சிறப்பாக செய்தமாணவ மாணவிகளுக்கு கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.