ஈரோட்டில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி: அரசு செயலாளர் நேரில் ஆய்வு!
ஈரோட்டில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு அரசு செயலாளர் தட்சணாமூர்த்தி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;
ஈரோட்டில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு அரசு செயலாளர் தட்சணாமூர்த்தி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு அடுத்த மாதம் (மே) 2 நாட்கள் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு வேளாண்மை உற்பத்தி ஆணையாளரும், அரசு செயலாளருமான வி.தட்சிணாமூர்த்தி நேற்று கல்லூரியில் ஆய்வு செய்தார். அப்போது கண்காட்சி, கருத்தரங்கு மேடை அமைவிடம் தொடர்பாக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின்போது, ஈரோடு மாநகராட்சி துணை ஆணையாளர் தனலட்சுமி, வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்செல்வி, தோட்டக்கலை துணை இயக்குநர் சரஸ்வதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.