காலிங்கராயன் வாய்க்காலுக்கு தண்ணீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவு
Bhavanisagar Dam Water Level Today in Tamil -பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.;
பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கும் பகுதி.
Bhavanisagar Dam Water Level Today in Tamil - பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டம் பவானிசாகா் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் முதல் போக பாசனத்துக்கு இன்று (ஜூன் 16) முதல் 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும்.
இதனால், ஈரோடு மாவட்டம் பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களிலுள்ள 15 ஆயிரத்து 743 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளாா்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2