அந்தியூரில் நாளை 2 புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவை துவக்கம்

நாளை இரண்டு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்துகளை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைக்கிறார்;

Update: 2022-02-27 13:30 GMT
அந்தியூரில் நாளை 2 புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவை துவக்கம்

கோப்பு படம்

  • whatsapp icon

ஈரோடு மாவட்டம் அந்தியூரிலிருந்து அத்தாணி வழியாக தாளவாடி மற்றும் திருச்சி வழியாக வேளாங்கண்ணி ஆகிய வழித்தடங்களில் பேருந்தை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதனையடுத்து, புதிய வழித்தடத்தில் இரண்டு பேருந்துகள் இயங்க அனுமதி அளித்த நிலையில், நாளை காலை 8 மணிக்கு, அந்தியூர் பஸ் நிலையத்திலிருந்து இரண்டு புதிய சொகுசு பேருந்து சேவையினை, அந்தியூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஜி. வெங்கடாசலம் எம்.எல்.ஏ. துவக்கி வைக்கிறார்.

Tags:    

Similar News