அரசு பேருந்து ஓட்டுநர் பெண் பயணியை ஒருமையில் பேசியதாக குற்றச்சாட்டு

சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்து ஓட்டுநர் பெண் பயணியை ஒருமையில் பேசியதாக கூறி பொதுமக்கள் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-02-10 04:45 GMT

அரசு பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பண்ணாரி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து ஓட்டுநராக, கந்தசாமி என்பவர் இருந்துள்ளார். அப்போது, சமத்துவபுரம் என்ற பேருந்து நிலையத்தில் பெண் பயணி இறங்குவதற்கு முன்பே, பேருந்தை ஓட்டுநர் நகர்த்தியுள்ளார். இதனால், பெண் பயணியின் குழந்தை கீழே விழுந்துள்ளது. இதுகுறித்து, ஓட்டுநரிடம் பெண் கேள்வி கேட்டதற்கு, ஓட்டுநர் ஒருமையில் பேசியுள்ளார். இதனைக் கேட்டு, ஆத்திரமடைந்த சகபயணிகள் மற்றும் பொதுமக்கள் பேருந்தை நிறுத்தி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News