கோபி பச்சைமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திரவிழா கொடியேற்றம்..
Pachamalai Murugan-ஈரோடு மாவட்டம் கோபி பச்சைமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது;
Pachamalai Murugan
Pachamalai Murugan-ஈரோடு மாவட்டம் கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவி லில் வரும் 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பங்குனி உத்திர தேர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி (சனிக்கிழமை) காலை கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் சேவற் கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கியது. இதை தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு பூத வாகனத்தில் சுவாமி திருவீதி வலம் வருதலும், இரவு 7 மணிக்கு தங்க மயில், தங்கரத புறப்பாடு நடைபெற்றது. விழாவையொட்டி வரும் 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை யாகசாலை பூஜைகள் நடக்கிறது.17-ந்தேதி காலை 11 மணிக்கு கல்யாண சுப்பிரமணியருக்கு திருக் கல்யாண உற்சவம் நடை பெற உள்ளது.இதைத் தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் சுவாமிக்கு அபிஷேக நிககழ்ச்சி மகா தீபாராதனையும் நடைபெற உள்ளது.
அன்று மாலை 6 மணிக்கு சண்முகர் வெள்ளை சாத்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 18-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. அன்று காலை 8மணிக்கு மகா அபிஷகம், திருப்படி பூஜை விழாவும், 9 மணிக்கு சண்முகருக்கு பச்சை சாத்தி அலங்காரமு ம் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து காவடி பால்குடம் அபிஷேங்கள் நடைபெற உள்ளன. மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது இதில் பக்தர்கள் கலந்து காண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். இதையொட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அன்னதானம் நடைபெற உள்ளது.19-ந் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை பூஜையும், மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், மகா தீபாராதனையும் நடை பெற உள்ளது, மாலை 5 மணிக்கு பரிவேட்டை,குதிரை வாக னத்தில் சுவாமி திருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 20-ந் தேதி மஞ்சள் நீர் உற்சவம், தெப்பத் திருவிழா, கொடி இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2