அந்தியூர் அருகே புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப் பாதை ஊர்வலம்

அந்தியூர் அருகே புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற சிலுவைப் பாதை ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிராத்தனை செய்தனர்.;

Update: 2022-04-15 09:30 GMT
அந்தியூர் அருகே புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப் பாதை ஊர்வலம்

சிலுவையை சுமந்துகொண்டு கிறிஸ்தவர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஏசு பாடல்களை பாடியபடி சென்ற போது எடுத்த படம் 

  • whatsapp icon

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூரில் பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான புனித வெள்ளியில் சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இன்று காலை புனித செபஸ்தியார் ஆலயத்தில் இருந்து சிலுவையை சுமந்துகொண்டு கிறிஸ்தவர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஏசு பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்றனர். மேலும் 14 இடங்களில் சிலுவையை வைத்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இறுதியாக தேவாலயத்தை அடைந்த கிறிஸ்தவர்கள் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனையில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News