கீழ்பவானி வாய்க்கால் கரையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு.
கீழ்பவானி வாய்க்கால் கரையில் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் உடலை மீட்டு சிறுவலூர் போலீசார் விசாரணை;
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைகாரன்கோயில் வாய்க்கால்மேடு பகுதி கீழ்பவானி வாய்க்கால் கரையில் இளம் பெண் உயிரிழந்து கிடப்பதாக சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற சிறுவலூர் போலீசார் இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக அப்பகுதியில் உள்ளவர்களிடம் உயிரிழந்துள்ள இளம் பெண் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அப்பகுதியை சேர்ந்த பெண் இல்லை என்பதும் நாடோடிகள் குழுவில் உள்ள பெண் போல் தெரிவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்துள்ள இளம் பெண்ணிற்கு சுமார் 30 வயது இருக்கலாம் என்றும் திருணமானவர் என்றும் சிறுவலூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இளம் பெண் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகவும் தற்கொலையா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.