கோபிசெட்டிபாளையம் பகுதியில் கனமழை: 40 ஏக்கர் கரும்பு பயிர் சேதம்

கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில், இரவு பெய்த கனமழையால், 40 ஏக்கரில் பயிரடப்பட்டிருந்த கரும்பு பயிர் முற்றிலும் சேதமடைந்தது.

Update: 2021-09-19 02:30 GMT

கனமழையால் சேதமடைந்த கரும்பு பயிர்கள்

ஈரோடு கோபிசெட்டிபாளையம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பொலவக்காளிபாளையம், கங்கம்பாளையம், கடுக்காம்பாளையம், நாதிபாளையம், கரட்டூர். தாசம்பாளையம், ஒத்தகுதிரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. கன மழையின் காரணமாக கங்கம்பாளையம், கடுக்காம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த, சுமார் 40 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ஒரு வருட கால பயிரான கரும்பு, ஓரிரு வார காலத்தில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் இருந்தது. நேற்று இரவு பெய்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழைக்கு பல லட்சம் மதிப்பிலான கரும்பு பயிர்கள் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. அரசு, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News