பிறந்தநாளில் கொரோனா நிதியுதவி செய்த பள்ளிச்சிறுமி..!

கோபி அருகே பள்ளிச்சிறுமி தனது பிறந்த நாளையொட்டி முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அமைச்சரிடம் நிதியுதவி வழங்கினார்.

Update: 2021-06-08 12:05 GMT

பள்ளிச்சிறுமி ஸ்ரீநிதி தனது பிறந்நநாளையொட்டி கொரோனா நிவாரண நிதி வழங்கினார்.

கொரோனா 2ம் அலையின் தாக்கம் மிக வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசுக்கு உதவிடும் வகையில் கொரோனா நிவாரண நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் பல்வேறு தரப்பினரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கினார். அப்போது அங்கு வந்த கள்ளிப்பட்டியை சேர்ந்த பள்ளிச்சிறுமி ஸ்ரீநிதி தனது பிறந்நநாளையொட்டி முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக 2500 ரூபாய் சேமிப்பு பணத்தை அமைச்சரிடம் வழங்கினார். நிதியை பெற்றுக்கொண்ட அமைச்சர் முத்துசாமி அச்சிறுமிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்தார். இதேபோல் கோபிரோட்டரி சங்கம்,கோபி உழவன் ரோட்டரி சங்கம், லையன்ஸ் கிளப் மற்றும் கோபி நகராட்சி சார்பில் கோபி அரசு மருத்துவமனையில் பயன்பெறும் வகையில் ஆக்ஸிசன் சிலிண்டர்கள் உட்பட மருத்துவ உபகரணங்களை அமைச்சரிடம் வழங்கினர்.



Tags:    

Similar News