விறுவிறுப்பாக நடைபெறும் போலீசாரின் தபால் ஓட்டுக்கள்: கலெக்டர் நேரடி ஆய்வு

கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியாற்றும் காவல்துறையினருக்கான தபால் ஓட்டு பதிவினை ஈரோடு கலெக்டர் கதிரவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-04-02 08:41 GMT

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் பணியாற்றும் காவல்துறையினர் தங்களது பகுதிகளில் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியாற்றும் ஈரோடு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 526 பேரும், பவானியில் 284 பேரும், கோபிசெட்டிபாளைத்தில் 381 பேரும், பெருந்துறையில் 233 பேரும் என மொத்தம் 1424 பேர் தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அவ்வாறு தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்த காவலர்கள் அனைவரும் அந்தந்த பகுதியிலுள்ள வாக்கு சாவடி மையங்களில் இன்று ஆர்வமுடன் தங்களது தபால் ஓட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றும் காவல்துறையினருக்கு தபால் ஓட்டு பதிவு செய்து வரும் வாக்கு பதிவு மையத்தை ஈரோடு கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கதிரவன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News