மகளிர் குழு கடன்கள் விரைவில் தள்ளுபடி செய்யப்படும் : கே.ஏ.செங்கோட்டையன்

கூரை வீடுகளை மாற்றுவதற்கு இன்னும் பத்து நாளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.50 ஆயிரம் வழங்க அரசாணையை முதல்வர் வெளியிட்டுள்ளார். மகளிர் குழுக்ககளுக்கும் கடன் தள்ளுபடி கிடைக்கும். -அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

Update: 2021-02-20 12:40 GMT

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைம் தனியார் திருமணமண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 1500 பயனாளிகளுக்கு நிரத்தர வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

அப்போது விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தின் வரலாற்றில் இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றில் ஒரு அரசு என்ன செய்யவேண்டுமோ அந்த கனவுகளை சீரோடும் சிறப்போடு செய்து வருகிறது. என்றைக்கு புரட்சித்தலைவர் மதுரைவீரன் எடுத்தாரோ, அன்று முதல் இன்று வரை சிந்தாமல் சிதறாமல் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளீர்கள். அதற்கு எவ்வளவு கோடி நன்றி சொன்னாலும் ஈடில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். கூரை வீடுகளை மாற்றுவதற்கு இன்னும் பத்து நாளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.50 ஆயிரம் வழங்க அரசாணையை முதல்வர் வெளியிட்டுள்ளார். தேர்தல் வருவதற்கு முன்பே விவசாய கடன் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தானே கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது நமக்கு என்ன என்று நீங்கள் கேட்கக்கூடும் கவலைப்பட தேவையில்லை மகளிருக்கும் கிடைக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் என பேசினார். அதனை தொடர்ந்து விழா மேடையில் ஒரு சிலக்கு மட்டும் வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய அமைச்சர் பின்னர் கீழே அமர்ந்திருந்த அனைவருக்கும் அவர்களது இருக்கைக்கே சென்று வழங்கினார். இவ்விழாவில் கோட்டாட்சியர் ஜெயராமன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News