கோபி படகு இல்லத்தை ஆய்வு செய்த எம்எல்ஏ செங்கோட்டையன்
கோபி சட்ட மன்ற உறுப்பினர் செங்கோட்டையன் படகு சவாரி செய்யும் இடத்தில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள மொடச்சூர் ஊராட்சி இந்திராநகரில் சில மாதங்களுக்கு முன்பு ரூ.2.63 கோடி மதிப்பீட்டில் சிறுவர் பூங்காவுடன் படகு சவாரி செய்ய ஏதுவாக குளம் புரணமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்தது. இந்நிலையில் குளத்தின் அருகில் படகு சவாரி செய்யும் பொதுமக்களின் வசதிக்காக புதிதாக நிழற்குடை அமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
மொடச்சூர் ஊராட்சி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிறுவர் பூங்காவில் பொதுமக்களின் வசதிக்காக புதிதாக நிழற்குடை அமைக்க கோபி சட்டமன்ற நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் சிறுவர் பூங்காவில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அதற்கான பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மௌதீஸ்வரன், நகரச் செயலாளர் பிரினியோ கணேஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியபாமா, காளியப்பன், அருள் ராமச்சந்திரன் முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.