கோபி நகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை தனது சொந்த செலவில் அகற்ற சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை.

Update: 2021-11-12 14:15 GMT

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய எம்எல்ஏ செங்கோட்டையன்.

கோபி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக பிளாஸ்டிக் கழிவுகள் பல்வேறு இடங்களில் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் வகையில் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பொதுமக்கள் கோபி சட்டமன்ற உறுப்பினரிடம் புகார் அளித்தனர்.  அதன் பெயரில் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் பிளாஸ்டிக் கழிவுகளை பார்வையிட்டு குவிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை சொந்த செலவில் மாற்றிட நடவடிக்கை மேற்கொண்டார். இச்செயலை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் வெகுவாக பாராட்டினர்.

Tags:    

Similar News