கொடிவேரி அணையில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அடுத்துள்ளது கொடிவேரி தடுப்பணை. இங்கு பண்டிகை காலங்களிலும் விடுமுறை நாட்களிலும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேரந்த பல்லாயிரக்கணக்கானோர் வருகை புரிந்து மகிழ்சியோடு அருவியில் நீராடிவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் பவானிசாகர் அணையில் முழு கொள்ளவை எட்டி உபரி நீர் திறக்கப்பட்டதால் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி முதல் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதயைடுத்து நாளை முதல் கொடிவேரி அணைக்கு வருகை தர உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு பொதுப்பணித்துறை அனுமதி வழங்கியுள்ளது.