சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் : தந்தை உட்பட 3 பேருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான சிறுமியின் தந்தை உட்பட மூவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.;
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கடந்த 2019 ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமியிடம் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கோபிச்செட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் தொடர்புடையதாக கூறி சிறுமியின் தந்தை மற்றும் அவருடைய நண்பர்களான அருணாசலம், மயில்சாமி ஆகிய மூன்று பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கானது ஈரோடு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கினை விசாரித்து வந்த மகிளா நீதிமன்ற நீதிபதி மாலதி இன்று தீர்ப்பளித்தார்.
அந்த தீர்ப்பில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும்,
இரண்டாம் குற்றவாளியான அருணாசலத்திற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் மூன்றாவது குற்றவாளியான மயில்சாமிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இவர்களின் அபராத தொகை ரூ.3 லட்சத்தை சிறுமியின் சேமிப்பில் சோ்ப்பதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.