ஹை..இனி ஜாலி..ஜாலி: கொடிவேரியில் பரிசல் பயணத்துக்கு அனுமதி
கோபிசெட்டிபாளையம், கொடிவேரி தடுப்பணையில் குளிக்கவும் பாிசல் பயணத்துக்கும் பொதுப்பணித்துறை அனுமதியளித்துள்ளது.;
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அடுத்துள்ளது கொடிவேரி தடுப்பணை. இங்கு பண்டிகை காலங்களிலும் விடுமுறை நாட்களிலும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வருகை புரிந்து மகிழ்சியோடு அருவியில் நீராடிவிட்டு செல்வது வழக்கம்.
மேலும் விடுமுறை தினங்களில் கொடிவேரி அணையில் குழந்தைகளுடன் பெற்றோர் கூடுவார்கள். குழந்தைகள் குதூகலமாக விளையாடி மகிழ்வார்கள். அணை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் கொடிவேரி தடுப்பணை அருவியில் நடைபெற்ற பராமாிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதால், இன்று முதல் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்கவும் பரிசல் பயணங்கள் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.