டி.என்.பாளையம் அருகே ஆசிட் ஊற்றி பனை மரங்களை அழிக்கும் மர்மநபர்கள்

டி.என்.பாளையம் அருகே ஆசிட் ஊற்றி பனை மரங்கள் அழிப்பதை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை;

Update: 2021-08-24 07:23 GMT

டி.என்.பாளையத்தில் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்ட பனை மரங்கள்

டி.என்.பாளையம் அருகே உள்ள அரக்கன்கோட்டை கிளை வாய்க்கால் செல்லும் வழியில் இருபுறமும் பல்வேறு வகையான மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. அதில் அதிகளவில் காணப்படுவது பனைமரங்கள் உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரக்கன்கோட்டை வாய்க்கால் கரையோரம் உள்ள 5 முதல் 6 ஆண்டுகள் வரையுள்ள பனை மரங்களின் குருத்துகளை வளர விடாமல், மர்ம நபர்கள் ஆசிட் ஊற்றி அழித்துள்ளனர்.

தமிழக அரசு பனை மரங்களை வெட்ட அனுமதி பெற வேண்டும் என்று தற்போது உத்தரவிட்டுள்ளது. மேலும் பனை மரங்களை நட வேண்டும் என்று விழிப்புணர்வும் செய்து வருகிறது. இந்த வேளையில் இது போன்ற செயல் நடந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவி கோட்ட பொறியாளரிடம் பனைமரங்களை ஆசிட் ஊற்றி அழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர்

பனை மரங்களை அழிவதை தடுக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்

Tags:    

Similar News