3 ஆயிரம் சதுரஅடி கடை மூட உத்தரவு: ஈரோட்டில் ஜவுளி, நகைக்கடைகள் அடைப்பு....

ஈரோடு மாவட்டத்தில், 3000 சதுர அடிக்கு மேல் உள்ள வணிக நிறுவனங்கள், ஜவுளி கடைகள் நகைக்கடைகள், அரசின் உத்தரவுக்கேற்ப இன்றுமுதல் அடைக்கப்பட்டுள்ளன.

Update: 2021-04-28 08:51 GMT

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு  பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.

ஏற்கனவே வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், தியேட்டர்கள், பெரிய மால்கள் மூடப்பட்டுள்ளன. அத்துடன், 3000 சதுரஅடிக்கு மேல் உள்ள கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 3000 சதுர அடிக்கு மேலுள்ள வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் ஆகியவை இன்று முதல் மூடப்பட்டுள்ளன.  ஈரோடு மாநகராட்சி பகுதியில், மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி உள்பட மாநகர் முழுவதும் உள்ள பெரிய ஜவுளி கடைகள் நகைக் கடைகளை மூடப்பட்டுள்ளன.

இதேபோல், கோபிச்செட்டிபாளையம், அந்தியூர், பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், மொடக்குறிச்சி என ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள பெரிய கடைகள் அனைத்தும் இன்று முதல் அடைக்கப்பட்டுள்ளன. 

Tags:    

Similar News