6 - 8 வகுப்புகள் திறக்க வாய்ப்பில்லை- செங்கோட்டையன்

Update: 2021-02-11 05:15 GMT

இன்றைய சூழ்நிலையில் 6 முதல் 8ம் வகுப்புகள் திறக்க வாய்ப்பில்லை என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 61கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்ட பணிகள் மற்றும் சாலை பணிகளுக்கு பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் கூறும் போது, 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப்கள் இல்லை, அதற்கு பதிலாக 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் 6 முதல் 8 வகுப்புகளுக்கு இன்றைய சூழ்நிலையில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை எனவும் தற்போது 98.5 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளதாகவும் கூறினார். 10,12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணைகள் வெளியிடுவது குறித்து முதல்வர் முடிவு செய்து பள்ளிகல்வித்துறை ஆலோசனையுடன் அட்டவணைகள் வெளியிடப்படும் என தொிவித்தார்.

Tags:    

Similar News