5 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: டெய்லருக்கு 10 ஆண்டு சிறை
ஈரோட்டில் 5 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த டெய்லருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.;
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் தம்பதியினருக்கு 5வயது மகள் உள்ளார். சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் வீட்டின் முன்பு விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் தனது பாட்டியுடன் வசித்து வரும் பழனிசாமி சிறுமியின் வீட்டின் அருகே உள்ள டெய்லர் கடையில் டெய்லராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ம் ஆண்டு சம்பவத்தன்று சிறுமியின் வீட்டின் முன்பக்கம் விளையாடிக் கொண்டிருந்தார்.
சிறிதுநேரம் கழித்து சிறுமியை காணாததால் சிறுமியின் பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது சிறுமியை அருகில் உள்ள டெய்லர் கடையில் இருந்து மீட்டுள்ளனர். இதுகுறித்து கோபி போலீசில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் 5வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த டெய்லர் பழனிசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50ஆயிரம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது