பிரபல மசாலா நிறுவன ஊழியரிடமிருந்து 2.16 லட்சம் ரூபாய் பறிமுதல்

தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த பிரபல மசாலா நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி சண்முகசுந்தரம் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவந்த ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்து 600 ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்…

Update: 2021-03-14 13:12 GMT

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகவேதன்பாளையம் ஊராட்சி பெரியகொரவம்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்து 600 ரொக்கம் இருந்தது தெரியவந்தது.

இருசக்கர வாகனத்தில் வந்தவர் கோபிசெட்டிபாளையம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்றும் பிரபல மசாலா நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியாக உள்ளதாகவும், கிராப்புறங்களில் உள்ள மளிகைக்கடைகளில் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட தொகையை வசூல் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் மளிகைக்கடைகளில் வசூல் செய்யப்பட்டதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததினால் அப்பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சந்திரசேகரன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனிதேவியிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News