இஸ்லாமிய கூட்டத்தை அனுமதிக்க கூடாது- இந்து முன்னணி

Update: 2021-02-18 05:00 GMT

மதுரையில் நடக்க இருக்கும் இஸ்லாமிய பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என இந்து முன்னணி மாநில தலைவர் கோரிக்கை விடுத்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் செய்தியாளா்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சமீப காலமாக இஸ்லாமியர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருவதாகவும் வரும் சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பிரச்சனை நடக்கப்போவதாகவும் தமிழகத்தில் உளவுத்துறை சாியாக செயல்பட்டு கண்காணித்து தீவிரவாதத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் மதுரையில் நடக்க இருக்கும் இஸ்லாமிய பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என கோரிக்கை விடுத்த காடேஸ்வர சுப்ரமணியம் வரும் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க இந்து முன்னணி வேலை செய்யும் என்றும் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் கூறியதோடு ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி போன்றவர்கள் தங்கள் கைகளில் முருகர், வேல், பிள்ளையார் போன்றவற்றை வைத்து கொண்டு மக்களை திமுகவின் பக்கம் திசை திருப்ப முயல்வதாகவும் தெரிவித்தார். சட்ட விரோதமாக தேவாலயங்கள் கட்டுவதை அரசு தடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News