பாரியூர் அம்மன் கோயில் மலர் பல்லக்கு ஊர்வலம்

மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்ட பல்லக்கில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்வைக்கான ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களை வருகை புரிவார்கள். அன்று இரவு முழுவதும் இராட்டிணம் , கடைகளில் கூட்டம் அலைமோதும்.

Update: 2021-01-10 10:24 GMT

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் இந்தாண்டு திருவிழா கொண்டாடுவதற்கு அரசு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் வீரமக்கள் திருவிழா நடத்தாமல் விடக்கூடாது என அமைச்சர் செங்கோட்டையனிடம் முறையிட்டனர். அமைச்சரின் பேச்சுவார்த்தைக்கு இணங்கி பக்தர்கள் இல்லாமல் திருவிழாவை நடத்திக்கொள்ள இந்து அறநிலையத்துறை அனுமதியளித்தது. அதன் அடிப்படையில் கடந்தமாதம் 24ந்தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அதனைதொடர்ந்து இம்மாதம் 4ஆம் தேதி சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து நேற்று முன்தினம் குண்டம் திருவிழாவில் பூசாரிகள் மற்றும் வீரமக்கள் உட்பட 80 பேர் மட்டுமே குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்திகடன் செலுத்திய நிலையில் தற்போது பக்தர்களுக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளதால் கோயில் பூசாரிகள் மடடுமே குண்டம் இறங்கி திருவிழாவை முடித்தனர். நேற்று தேர் திருவிழாவில் பக்தர்களே தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை நடத்தினர். இதனை தொடர்ந்து இன்று மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்ட பல்லக்கில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்வைக்கான ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களை வருகை புரிவார்கள். அன்று இரவு முழுவதும் இராட்டிணம் ,கடைகளில் கூட்டம் அலைமோதும். இந்தாண்டு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாலும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் இல்லாததினாலும் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. மலர் பல்லக்கில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஊர்வலம் பாரியூர் கோயிலில் தொடங்கி வெள்ளாளபாளையம் பிரிவு,சாணார்பதி,முருகன்புதூர்,மேட்டுவலவு,பேருந்துநிலையம் வழியாக சென்று கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள தெப்பக்குளம் சென்றடைந்தது. இங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் கோயில் வளாகத்தை வந்தடையும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. அம்மன் மலர் பல்லக்கு நிகழ்வில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் சார்பில் 100க்கும் மேற்பட்டகாவலர்கள் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 16ஆம் தேதி மறு பூஜையுடன் திருவிழா முடிவடைய உள்ளது. ஓவ்வொரு ஆண்டும் இத்திருவிழாவிற்கு ஏராளமானகடைகள் இராட்டினங்கள் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் காங்கேயம் காளைகள் கண்காட்சி என திருவிழாகளை கட்டி வந்த நிலையில் இந்தாண்டு எதற்கும் அனுமதியில்லை என்ற நிலையில் கோயில் வளாகம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags:    

Similar News