பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு அமைச்சர் செங்கோட்டையன்

Update: 2021-01-04 05:32 GMT

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க பெற்றோர், மாணவர்களிடம் கருத்து கேட்பு இன்று தொடங்கி இந்த வாரம் இறுதி வரை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குள்ளம்பாளையம் மற்றும் வேளண்மை கூட்டுறவு விற்பனை சங்கம் உட்பட 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2500 வழங்கி சிறப்புரையாற்றினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளிகள் திறந்தவுடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகளில் நடத்தபடும் செய்முறை தேர்வுகள் அனைத்தும் நடைபெறும். அதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும். பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர், மாணவர்களிடம் கருத்து கேட்பு இன்று தொடங்கி இந்த வாரம் இறுதி வரை நடைபெறும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News