பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு ! அமைச்சர் செங்கோட்டையன் பதில்

Update: 2020-12-30 07:30 GMT

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவு செய்து உள்ளதாகவும் முதலமைச்சரின் ஒப்புதல் பெற்றவுடன் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூடக்கரை, ஆண்டிபாளையம், எ.செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குருமந்தூர் ஊராட்சியில் 193 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகளையும் உதவித்தொகைகளையும் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவு செய்து உள்ளதாகவும் முதலமைச்சரின் ஒப்புதல் பெற்றவுடன் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர் என்றும் அரசு பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம் .அதற்காகவே பெற்றோர்கள் விரும்பி அரசு பள்ளியில் சேர்க்கின்றனர் என்றும் கூறினார்.இதனை ஊக்கப்படுத்தும் விதமாக தான் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு கொண்டு வந்துள்ளதாகவும் இதன் மூலம் 405 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News