நடப்பாண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டா என்பதை முதலமைச்சர் அறிவிப்பர் -கே.ஏ.செங்கோட்டையன்

கொரோனா பிரச்சினை காரணமாக நடப்பு கல்வியாண்டில் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. பள்ளிகளில் இறுதி ஆண்டு தேர்வு நடைபெறுமா, அல்லது நடப்பாண்டு பூஜ்ஜியம் கல்விஆண்டாக அறிவிக்கப்படுமா என்பதை முதலமைச்சர் தான் முடிவு செய்வார் என செய்தியாளர் சந்திப்பில் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-26 07:58 GMT

பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே காராப்பாடியில் சுமார் 60 லட்சம் மதிப்பிலான சாலை மேம்பாட்டுபணிகளை தொடங்கி வைத்தார், அடுத்து நம்பியூா் பொலவபாளையம் ஊராட்சியில் 120 பயனாளிகளுக்கு தலா 4 விலையில்லா வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை வழங்கினார். அதன் பின்னர் சாவக்கட்டுபாளையத்தில் தமிழக அரசின் மினி கிளினிக்கையும் சிறப்பு மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

நடப்பு கல்வியாண்டில் கொரோனா பிரச்சினை காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. பள்ளிகளில் இறுதி ஆண்டு தேர்வு நடைபெறுமா அல்லது நடப்பாண்டு பூஜ்ஜியம் கல்விஆண்டாக அறிவிக்கப்படுமா என்பதெல்லாம் குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார்.

அம்மா ஊரக விளையாட்டு திட்டத்தின் கீழ் அரசு ரூபாய் 64 கோடி ஒதுக்கீடு செய்து பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணி 75 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஆசிரியர்களுக்கு ஏற்கனவே 52,000 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 36 ஆயிரம் மடிக்கணினிகள் படிப்படியாக வழங்கப்படும். தமிழகத்தில் 53 லட்சம் மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றின் மதிப்பு சுமார் 12,500 ரூபாய் ஆகும். எனவே மற்ற மாநிலங்களில் தரும் செல்போன் மற்றும் டேப் கருவியை விட இது விலை உயர்ந்தது. இதன்மூலம் மாணவர்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிலபஸை சுலபமாக பயிலமுடியும் என்றார்.

கோபி கிருஷ்ணா நகர் பகுதியில் உள் விளையாட்டு அரங்கம் கட்டும் பணி முடிவடைந்துள்ளது விரைவில் முதலமைச்சரால் அது திறக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 4 மினி கிளினிக் என்ற முறையில் 32 கிளினிக் திறக்கப்பஉள்ளது. தமிழகஅரசு இந்தியாவில் எந்த மாநிலமும்செய்யாத அளவிற்கு 2000 மினி கிளினிக் அறிவித்துள்ளது. இதன் மூலம் கிராமப் புற ஏழைஎளிய மக்கள் தங்கள் பகுதியிலேயே மருத்துவவசதி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags:    

Similar News