கோபிச்செட்டிப்பாளையம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
கோபிச்செட்டிப்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.;
கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள வெள்ளையகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். கூலித்தொழிலாளி. நேற்று மாலை இருசக்கர வாகனத்தில், குருமந்தூர் மெயின் ரோடு பகுதியில் சென்றபோது, அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் செந்தில் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செந்தில், கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.