கோபிச்செட்டிப்பாளையம் காவல்நிலையத்தில் போலீசார் ஒருவருக்கு கொரோனா
கோபிச்செட்டிப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;
ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கோபிச்செட்டிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கோபி நகராட்சி சார்பில் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.