தாயுடன் சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து
தாயுடன் சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அத்தாணி பகுதியை சேர்ந்த மயில்வாகனன், இவரது மனைவி தெய்வப்பிரியா, மகன்கள் ஹரினீஷ் (வயது 8) , ரூபன். மயில்வாகனன் குடும்பத்துடன் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் பகுதியில் உள்ள ஜவுளிக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது, மயில்வாகனன் ஒருபுறம் இருசக்கர வாகனத்தை நிறுத்தும்போது, தெய்வபிரியா மற்றும் மகன்களுடன் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது, அவ்வழியாக வந்த பைக் ஒன்று எதிர்பாராதவிதமாக ஹரினீஷ் மீது வேகமாக மோதியதில், சிறுவன் தூக்கி வீசப்பட்டதில், தலையில் பலத்த காயமடைந்த சிறுவன், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இருசக்கர வாகனத்தில் வந்தவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.