கோபிசெட்டிபாளையம் - அந்தியூர் சாலை அகலப்படுத்தும் பணி தீவிரம்
கோபிசெட்டிபாளையம்-அந்தியூர் சாலையில் கவுண்டன்புதூர் பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
கருங்கரடு பகுதி அருகே சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம்-அந்தியூர் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அந்தியூர் பகுதியில் இருந்து, செங்கற்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் என பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரத்திலும் சாலை பரபரப்பாகவே இருக்கும்.
ஆனால், சாலை குறுகலாக இருப்பதால், அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால், நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை அகலப்படுத்த முடிவு செய்தனர்.
இதனையடுத்து கோபி-அந்தியூர் சாலையில் கவுண்டன்புதூரில் சாலையினை அகலப்படுத்தி இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.