கோபி: டி.என்.பாளையம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-29 13:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் அம்மன் நகர் செட்டியார் தோட்டத்தில் சீட்டாட்டம் (வெட்டாட்டம்) நடைபெறுவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் அங்கே சீட்டு விளையாடி கொண்டிருந்த கே.என்.பாளையம் பகுதியை ராஜன் (55), பழனிச்சாமி (58), ஐயப்பன் (54), கோகுல் (30) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மேலும் நான்கு நபர்களிடம் இருந்து 14, 630 ரூபாய் ரொக்கம் பணம் மற்றும் சீட்டு கட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News