அந்தியூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
அந்தியூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த, போலீசார் 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்களை அந்தியூர் போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். இன்று அந்தியூர் ஜி.எஸ்.காலனி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் (31) என்பவர் கைது விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தேவராஜை கைது செய்து, அவரிடம் இருந்து 2பாக்கெட்டுகளில் வைத்திருந்த 100 கிராம் அளவுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.