பெருந்துறை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
பெருந்துறை அருகே உள்ள திங்களூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.;
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த திங்களூர் அருகே உள்ள கைக்கோளபாளையத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, திங்களூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், போலீசார் கைக்கோளபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் . இதனையடுத்து, போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்ததில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அசோக்குமார் தாஸ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.