மவுனம் அனைத்தும் நன்மைக்கே: டெல்லி சென்று திரும்பியது குறித்து ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில்!
டெல்லி சென்று திரும்பியது குறித்த கேள்விக்கு மவுனம் அனைத்தும் நன்மைக்கே என்று ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில் கூறினார்.;
டெல்லி சென்று திரும்பியது குறித்த கேள்விக்கு மவுனம் அனைத்தும் நன்மைக்கே என்று ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில் கூறினார்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் பங்கேற்பதற்காக ஈரோட்டில் இருந்து சென்னைக்கு செல்வதற்காக ஈரோடு ரயில் நிலையத்துக்கு நேற்று இரவு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ வந்தார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள், டெல்லி செல்கிறீர்களா.?, தொடர்ச்சியாக மவுனமாக இருக்க காரணம் என்ன என்று கேள்வியை எழுப்பினர்.. இதைத்தொடர்ந்து, அவர் "மவுனம் அனைத்தும் நன்மைக்கே" என்று ஒற்றை வரியில் பதில் கூறிவிட்டு ரயில் நிலையத்துக்குள் சென்றார்.
பின்னர், ஈரோட்டில் இருந்து புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் சென்னைக்கு சென்றார். அவருடன், பவானிசாகர் தொகுதி பண்ணாரி எம்எல்ஏ உடன் சென்றார்.