முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.;

Update: 2022-08-07 05:45 GMT

ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதி உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. 

முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கவுந்தப்பாடி கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க.  அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து, பொதுமக்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News