ஈரோட்டில் ரயிலில் அடிபட்டு மயில் பலி!

ஈரோடு ரயில் நிலையத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த மயிலை வனத்துறையினர் மீட்டனர்.;

Update: 2025-04-17 00:50 GMT

ஈரோடு ரயில் நிலையத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த மயிலை வனத்துறையினர் மீட்டனர்.

ஈரோடு ரயில் நிலையம் வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில், நேற்று மதியம் பெண் மயில் ஒன்று ஈரோடு ரயில் நிலைய பகுதியில் பறந்து சென்றது. அப்போது, அந்த வழியாக வந்த ரயிலில் அடிப்பட்டு மயில் இறந்தது.

இதைப்பார்த்து, அதிர்ச்சி அடைந்த ரயில் பயணிகள் இதுகுறித்து ஈரோடு வனத்துறையினருக்கும், ரயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, ரயில்வே போலீசார் விரைந்து வந்து தண்டவாள பகுதியில் இறந்து கிடந்த மயிலை எடுத்து நடைமேடை பகுதியில் வைத்தனர்.

பின்னர், வனத்துறையினர் அங்கு வந்து, உரிய முறைப்படி அடக்கம் செய்வதற்காக மயிலை அங்கிருந்து எடுத்து சென்றனர்.

Similar News