அந்தியூர்: வனத்துறை சார்பில் வனப்பயிர் நாற்றங்கால் உற்பத்தி பயிற்சி வகுப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வனத்துறை சார்பில், வனப்பயிர் நாற்றங்கால் உற்பத்தி பயிற்சி வகுப்பு அந்தியூர் வனச்சரக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.;

Update: 2022-03-25 17:15 GMT

பயிற்சி வகுப்பில் அந்தியூர் வனச்சரக அலுவலர் உத்திரசாமி பேசிய போது எடுத்த படம்

தமிழ்நாடு வனத்துறை மற்றும் தாட்கோ சார்பில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்கான வனப்பயிர் குறித்த பயிற்சி நேற்றும் இன்றும் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி அந்தியூர் வனச்சரக அலுவலர் உத்திரசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண் காடுகள் வளர்ப்பு, நாற்றங்கால் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் காக்காயனூர் , கிணத்தடி , தொட்டகோம்பை, ஜீ.எஸ்.காலனி பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Tags:    

Similar News