ஈரோட்டில் வணிகர்கள் சங்கத்தின் சார்பில் 2000 பேருக்கு அன்னதானம்

ஈரோட்டில் வணிகர்கள் சங்கத்தின் சார்பில் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.;

Update: 2025-04-01 12:00 GMT

ஈரோட்டில் வணிகர்கள் சங்கத்தின் சார்பில் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஈரோடு பெரிய மாரியம்மன் சின்ன மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஈரோட்டில் நேதாஜி தினசரி மார்க்கெட் கனி வணிகர்கள் சங்க உறுப்பினர்கள் காவேரி கரையிலிருந்து தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இதைத் தொடர்ந்து, கனி வணிகர்கள் சங்க கடைகள் பகுதியில் சங்கத்தின் சார்பில், பொதுமக்கள் 2 ஆயிரம் பேருக்கு சாம்பார் சாதம், வெஜிடபிள் பிரியாணி, தயிர் சாதம், கேசரி, மைசூர் போண்டா, ஊறுகாய் போன்றவற்றை வழங்கினர்.

சங்கத்தின் தலைவர் டி.என்.சுப்பிரமணியம், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செயலாளர் எம்.சாதிக்பாட்சா, பொருளாளர் ஜி.சி.எஸ்.கார்த்தி, துணைத் தலைவர் எஸ்.சுரேஷ், துணைச் செயலாளர் ஏ.சரவணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்ட தலைவர் ஆர்.கே.சண்முகவேல், செயலாளர் பொ.இராமச்சந்திரன், செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.சாதிக் பாட்சா, இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.லாரன்ஸ், ரமேஷ் மாநகர செயலாளர் கே.பாலமுருகன், இளைஞர் அணி என்.ஜியாவுதீன் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Similar News