சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,000-க்கு விற்பனையாகிறது.

Update: 2021-11-27 01:00 GMT

சத்தியமங்கலம்,  கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு, நாள்தோறும் காலை 7 மணி முதல், மதியம் 2 மணி வரை, பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு, சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள விவசாயிகள் 2.5 டன் பூக்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில், மல்லிகைப்பூ ஒரு கிலோ  ரூ.875-க்கும், முல்லை ரூ.580-க்கும், காக்கடா ரூ.550-க்கும், செண்டு மல்லி ரூ.83-க்கும், பட்டுப்பூ ரூ.76-க்கும், ஜாதிமல்லி ரூ.500 க்கும், கனகாம்பரம் ரூ.1,000-க்கும், சம்பங்கி ரூ.25 க்கும், அரளி ரூ.300-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் விற்பனையானது.

Tags:    

Similar News