பெருந்தலையூர் ஆற்றுப்பாலத்தை தொட்டுச் செல்லும் வெள்ளம்

Bhavani River Bridge-பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஆப்பக்கூடல் - கவுந்தப்பாடி சாலையில் உள்ள பெருந்தலையூர் ஆற்றுப்பாலத்தை தொட்டபடி வெள்ளம் செல்கிறது.

Update: 2022-08-06 13:30 GMT

பெருந்தலையூர் ஆற்றுப்பாலத்தை தொட்டபடி செல்லும் வெள்ளம்.

Bhavani River Bridge-ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 25,500 கன அடி உபரிநீர் இன்று காலை திறந்து விடப்பட்டது. அந்தியூர் அருகே உள்ள சவுண்டப்பூர், அத்தாணி, காமராஜபுரம், கருவல்வாடிப்புதூர், கீழ்வாணி, மூங்கில்பட்டி, கூத்தம்பூண்டி. ஆப்பக்கூடல், ஒரிச்சேரிப்புதூர், தளவாய்பேட்டை, பவானி பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்கள் பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளாக உள்ளது.

இந்த நிலையில், இன்று காலை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் சவுண்டபூர், அத்தாணி, காமராஜபுரம், கருவல்வாடிபுதூர், ராக் ணாம்பாளையம், அம்மாபாளையம், மேவாணி, கீழ்வாணி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுப்பாலங்கள் களை கடந்து தண்ணீர் இருகறைகளையும் தொட்டவாறு பெருக்கெடுத்து செல்கிறது.

கருவல்வாடிபுதூர், ராக்கனம்பாளையம் பகுதியில் தன்னாசிகருப்பன் கோயிலை மூழ்கடித்தபடி செல்லும் வெள்ளம்.

வெள்ளத்தில் பெரிய, சிறிய மரக்கட்டைகள், மரங்கள் வேரு டன் அடித்து செல்லப்படுகிறது. இப்பகுதியில் உள்ள கோயில்கள். வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.கரையோர பகுதி வீடுகளுக்கு அத்தாணி பேரூராட்சி, குப்பாண்டம்பாளையம், மேவாணி. கூத்தம்பூண்டி, ஊராட்சி சார்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அம்மாபாளையம், ராக்கணம்பாளையம், கணேசன் புதூர் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவி பரிசல் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் அத்தாணி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் மேவாணி, கீழ்வாணி, கருவல்வாடிபுதூர் என 5 கி.மீ. சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பவானி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கும் பட்சத்தில் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், கோயில்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News