காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்றவர் உயிரிழப்பு
அம்மாபேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி பலி; போலீசார் விசாரணை.;
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 61) . இவர் மீன் பிடி தொழிலாளி. சம்பவத்தன்று, நெரிஞ்சிப்பேட்டை கதவணை நீர்மின் திட்டப் பகுதியில் பரிசலில் மீன் பிடிக்கச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அப்பகுதியில் மீனவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், கிருஷ்ணனின் சடலம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து, அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.