கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் நூல் மில்லில் தீ விபத்து

கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள் மற்றும் பஞ்சு பேல்கள் எரிந்து சேதம்.;

Update: 2022-01-31 10:45 GMT

தீயில் கருகிய பஞ்சு பேல்கள்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சி.கே.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவருக்கு சொந்தமான நூல் மில் ஒன்று அயலூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு ஊழியர்கள் வழக்கம்போல பணியாற்றி கொண்டு இருந்தனர். அப்போது, புளோ ரூம் என்ற பகுதியில் மின்கசிவு காரணமாக பஞ்ச பேல்களில் தீப்பொறி பட்டு தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து, ஊழியர்கள் மில்லில் பொருத்தப் பட்டிருந்த தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த கோபி தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயிணை அணைத்தனர். இந்த தீ விபத்தில்  பல லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள், பஞ்சு பேல்கள் எரிந்து சேதமானது தெரியவந்தது.  இந்த தீ விபத்து குறித்து சிறுவலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News