சித்தோடு அருகே இரு குடிசை வீடுகளில் தீ: பொருட்கள் எரிந்து சாம்பல்

சித்தோடு அருகே கன்னிமார்காடு பகுதியில் இரு குடிசை வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகின.;

Update: 2022-03-16 11:30 GMT

தீயணைப்பு துறையினர் தீயிணை போராடி அணைத்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கன்னிமார்காடு பகுதியில் அனிதா(30) மற்றும் உஷா(35) ஆகியோருக்கு சொந்தமான இரு குடிசை வீடுகள்  உள்ளன. குடிசை வீட்டில் திடீரென புகையுடன் நெருப்பு வருவதை பார்த்த அப்பகுதியினர், பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்,  கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த குடிசை வீட்டின் மீது  தண்ணீர் அடித்து,  இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

வெப்பநிலை காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருக்கூடும் என தீயணைப்பு துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணை தெரியவந்துள்ளது. சித்தோடு போலீசார் வழக்குப் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் வீட்டில் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் நிகழவில்லை.

Tags:    

Similar News