ஜம்பையில் வாழைத் தோட்டத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் தீ விபத்து

பவானி அருகே உள்ள ஜம்பையில் வாழைத் தோட்டத்தில், மின் கம்பி அறுந்து விழுந்து தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2022-03-23 13:15 GMT

வாழைத் தோட்டத்தில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஜம்பை மாரமரத்து தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில்,  வாழை பயிரிட்டு உள்ளார். இவரது தோட்டத்தின் மேலே செல்லும் மின் கம்பி திடிரென அறுந்து கீழே விழுந்தது. இதில் கீழே கிடந்த வாழை சறுகில் ஏற்பட்ட தீ,  வாழைத்தோட்டம் முழுவதும் பிடித்து எரிய தொடங்கியது.

இதை பார்த்த விவசாயி செந்தில்குமார் பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள்,  ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் ஐந்து ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வாழைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News