சித்தோடு அருகே காணமால் போன, மகனை கண்டுபித்து தரக்கோரி தந்தை போலீசில் புகார்

சித்தோடு அருகே கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல் போன, மகனை கண்டுபிடித்து தரக் கோரி தந்தை சித்தோடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.;

Update: 2022-05-07 10:15 GMT

கிருஷ்ணக்குமார்.


ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பேரோடு பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் கிருஷ்ணகுமார். இவர் கடந்த டிசம்பர் மாதம் காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதே போன்று கடந்த முறை வீட்டை விட்டு சென்றபோது 10தினங்களில் கிருஷ்ணகுமார் வீடு திரும்பியதால் தற்போது வந்துவிடுவார் என்று நிலையில் இருந்ததாக தந்தை தங்கராசு தெரிவித்தார். இருப்பினும் 5மாதங்கள் கடந்த நிலையில் மகனை கண்டுபிடித்து தரக்கோரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் புகைப்படம் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News