பேரூராட்சிகளில் உழவர் சந்தை அமைக்க வேண்டும்: ஈரோட்டில் நடந்த விவசாய சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்
தமிழகத்தில் மாநகராட்சியில் உள்ளது போல பேரூராட்சிகளில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என ஈரோட்டில் நடந்த தமிழக விவசாய சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
தமிழகத்தில் மாநகராட்சியில் உள்ளது போல பேரூராட்சிகளில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என ஈரோட்டில் நடந்த தமிழக விவசாய சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக விவசாய சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு வாசன் கண் மருத்துவமனை கூட்ட அரங்கில் இன்று (டிச.17) நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கே.சி.இரத்தினசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் வகித்தார்.
கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார். கூட்டத்தில் கூட்டுறவு கடன் தள்ளுபடியில் பணம் செலுத்திய 734 விவசாயிகளுக்கு சுமார் 20 கோடி ரூபாயை திரும்பி வழங்க வேண்டும்.
தமிழகத்தில் மாநகராட்சியில் உள்ளது போல பேரூராட்சிகளில் உழவர் சந்தை அமைக்க வேண்டும். மேட்டூர் வலது கரையில் அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை தூர்வாரி நவீனப்படுத்த வேண்டும். கீழ்பவானி பாசனப்பகுதியில் உள்ள 26 கசிவு நீர் திட்டங்கள் மூலம் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது.
எனவே நீர்வளத்துறை நிதி ஒதுக்கி கால்வாயை புனரமைப்பு செய்ய வேண்டும். உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட தலைவர் கே ராமலிங்கம் செயலாளர் டி. சுப்பு (எ) முத்துசாமி, பொருளாளர் மோகன், மாநில பொதுச் செயலாளர் வரதராஜன், திமுக விவசாய அணி செயலாளர் கள்ளிப்பட்டி மணி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விவசாயிகளில் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் மாவட்டத் துணைத் தலைவர் பி.ஆர்.ஆதவன் நன்றி கூறினார்.